எதிர்க்கட்சித் தலைவர் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று (புதன்கிழமை) (13) காலை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

வெளிவிவகார செயலாளர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்த போது, இருவருக்குமிடையில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களும் மற்றும் பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
 
இதன் போது கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார செயலாளர், கலந்துரையாடலில் இடம்பெற்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமென தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com