எட்டு பேர் பலி. கடலுக்கு சென்ற மீனவர்கள் ஐவரை காணவில்லை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் மூன்று வெவ்வேறு வேறு சம்பவங்களில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவர் இதுவரையிலும் கரைக்கு திரும்பவில்லை என்று அவர்களுடன் எவ்விதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காலி பொத்தல பகுதியில் அறுந்துவிழுந்த மின்வடத்தை தவறுதலாக மிதித்த இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களில் இருவர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்இ இரெக்ட் தமிழ் வித்தியாலய. அதிபர் லட்சுமணன்(55) என அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com