எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சற்று நேரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வந்த அரசியல் குழப்பம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதை  முடிவுக்கு வந்தது. 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பேசுவார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தற்போதைய நிலையில் 117 எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்தை ஆதரித்தால், அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com