எங்கு ? எவ்வாறான சந்தை? – நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் – வடக்கு முதலமைச்சர்

CM-Largeஎங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில்
நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,
பொருளாதார மையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையப்போவது எல்லோரும் அறிந்ததே. மாங்குளத்தில் கடல் உணவு சம்பந்தமான சந்தையும், வவுனியா மதகுவைத்த குளத்தில் மரக்கறி சந்தையும் நிறுவப்படும் என்ற செய்தி மக்களிடையே பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன.

எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமான தீர்மானம், ஆலோசனைகள் பெற்ற பின்னர் எம்மால் எடுக்கப்படும். தீர்மானம் எடுக்கப்படாத ஒரு விடயம் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds