எங்கள் நிலம் எமக்கு வேண்டும் – யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

தமிழர் தாயகத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்கு, கேப்பாபிலவு உள்ளிட்ட மக்களின் நிலங்களை விடுவிக்கக் கோரி இலங்கையின் அனைத்துப் பிரதேச மக்களது அமைப்புக்களும் இன – மத வேறுபாடின்றி யாழ் நகரத்தில் ஒன்றுகூடி தன்னெழுச்சிப் போராட்டத்தை நடாத்தினர்.


யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் பல நூற்றுக்கணக்கானவர்கள் இன்று (புதன்கிழமை) ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதோடு தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மகஜர் கையளித்தனர்.
யாழ். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், திருகோணமலை உதயம் மாவட்ட குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பு, திருகோணமலை மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கம், அம்பாறை பானம பற்றை பாதுகாப்பு அமைப்பு, மொனறாகலை ஊவா வெல்லஸ்ஸ மக்கள் அமைப்பு, மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம், வலி. வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம், மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம், மயிலிட்டி மக்கள் அமைப்பு, நீர்கொழும்பு டெலிகொம் மனிதவலு போராட்ட ஒற்றுமை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com