எங்களது வருகை திடீர்த்தாக்குதல் பாணியிலானது – ஜனநாயகப் போராளிகள்

(யாழ் – 13.07.2015) வித்தியாதரன் தலைமையிலான சுயேற்சைக்குழு (ஜனநாயக போரளிகள் கட்சி) இன்று திங்கட்கிழமை முற்பகல் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் செய்தது. அதன் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஊடகவியலாளரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியி்ன் ஸ்தாபகருமான ந.வித்தியாதரன் ஜனநாயகப் போராளிகளின் தேர்தலை ஒட்டிய திடீர் வருகைபற்றிகேள்விக்குப் பதிலளிக்கும்போது விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் திடீர் தாக்குதல் பாணியுடையதாக இருக்கும் அதுபோலவே எங்கள் அரசியல் பிரவேசமும் திடீர்த்தாக்குதல் பாணியிலானதாக இருந்தது என்று பதிலளித்தார்.

எனினும் ஊடகவியலாளர்களின் பிறிதொரு கேள்விக்குப் பதிலளித்த அவர் தமது கட்சி விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தாங்கள் வெளிநாடுகளில் இயங்கும் புலிகள்சார் எந்த அமைப்புக்களுடனும் தொடர்புகள் எதனையும் பேணப்போவதி்ல்லை எனவும் பதிலளித்தார்.

ஜனநாயகப் போராளிகளின் வேட்பாளர்கள் விபரம்

நடேசப்பிள்ளை வித்தியாதரன்

கணேசலிங்கம் சந்திரலிங்கம், 
இராசையா தர்மகுலசிங்கம், 
சிவநாதன் நவீந்திரா, 
விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், 
காளிக்குட்டி சுப்பிரமணியம், 
தங்கராசா தேவதாசன், 
சிவகுரு முருகதாஸ், 
குமாரவேலு அகிலன் 
வீரன் சக்திவேல் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds