ஊழல் மோசடிக் குற்றவாளிகள் உயர் பதவிகளில் – மைத்திரி கவலை !

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் உயர் பதவிவகித்த பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாரிய அளவிலான ஊழல் மோசடிகள், அரச வளங்களையும் அதிகாரத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துதல் என்பன பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மத்தியில் நாட்டில் உயர் பதவிகளை வகித்தவர்களும் இடம்பெறுகின்றார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதனை மூடிமறைக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக சிலர் புதிய கட்சியை உருவாக்க முயன்று வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

வெல்லவாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். மக்களின் பணத்தை திருடிய அனைவருக்கும் தண்டனை வழங்கி, உரிய பணத்தை ஈட்டிக் கொள்ளும் பொறுப்பு நிறைவேற்றப்பட இருக்கின்றது. இது 2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற தேசிய மட்டத்திலான அனர்த்தமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மொனறாகலை மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்களினதும் உரிமைகளை பறித்தெடுக்க இடமளிக்கப்பட மாட்டாது.
சிறந்த சமூகத்தை உருவாக்கும் பயணத்தில் சகல சர்வமதத் தலைவர்களினதும் கருத்துக்களுக்கு செவிசாய்க்கத் தயார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com