ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் படையினரால் விடுவிப்பு

ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் இன்று படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையை மீள விடுவிக்கும் நிகழ்வு இன்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. யாழ் மாவட்ட இராணுவ மேயர் ஜெனரல் தளபதி தர்சன ஹெட்டியாராட்சி கலந்து கொண்டு பாடசாலையை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் முரளியிடம் கையளித்தார். கடந்த 27 வருடங்களாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் 4.5 பரப்பளவு கொண்ட ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. முன்னர் இராணுவத்தினரால் பாடசாலையைச் சுற்றி அடைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் மற்றும் முகாம் தளபாடங்கள் தற்போது அகற்றப்பட்டு வருகிமையினைக் காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com