ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வெடிக்காத நிலையில் மிதிவெடி மீட்பு


யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட கரம்பொன் பகுதியில் வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று (21) விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மிதிவெடியை கண்டு அயலவர்களிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து குறித்த மதிவெடி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மிதிவெடி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே இராணுவ முகாம் ஒன்று காணப்பட்டதாகவும் தற்போது குறித்த முகாம் அகற்றப்பட்ட நிலையில் இம்மிதி வெடி கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் நாளை குறித்த மிதிவெடியை விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்று செயலிழக்கம் செய்யவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com