சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணமில்லை!

ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணமில்லை!

அரசு, விடுமுறை நாள்களை அறிவித்து ஊரடங்கு உத்தரவு விதிக்கப் போகிறது என்று பல்வேறு தவறான தகவல்கள் பல்வேறு தரப்புகளால் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அரசால் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அரச தகவல் திணைக்களம் இன்றிரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கந்தகாடு போதைப்பொருள் தடுப்பு மையத்தில் கோவிட் – 19 தொற்று நோயால் பாதிக்கப்படுவோர் தொடர்வதானாலும் நாட்டில் கோரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, விசாரணைகளை நடத்துதல், பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பது, அவர்களுடன் தொடர்புடையோரை அடையாளம் காண்பது மற்றும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி கண்காணிப்பது போன்ற அனைத்து பொருத்தமான நடைமுறைகளும் சம்பந்தப்பட்ட பகுதிகள் மற்றும் இருப்பிடங்களை உள்ளடக்கி விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன என்பது உள்பட பல்வேறு தவறான தகவல்கள் சமூகமயமாக்கப்படுவதில் காணலாம்.

இந்த சூழ்நிலையில், அரசு, விடுமுறை நாள்களை அறிவித்து ஊரடங்கு உத்தரவு விதிக்கப் போகிறது என்று பல்வேறு தவறான தகவல்கள் பல்வேறு தரப்புகளால் தொடர்ந்து பரப்பப்படுகின்றன என்பதும் காணப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதை அரசு தெரிவித்துக் கொள்கிறது.

அதன்படி, இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதன் நோக்கம் மக்களை தவறாக வழிநடத்துவதும், சமூகத்தில் தேவையற்ற இடையூறுகளை உருவாக்குவதும் என்பது தெளிவாகிறது.

இதுபோன்ற தவறான பரப்புரைகளைப் பரப்பியவர்கள் மீது முறையான விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அனைத்து விடயங்கள் குறித்தும், அதே போல் ஒரு நபர் கோவிட் – 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், அரசின் சார்பாக, அரசு எடுக்கும் நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் அக்கறை கொண்ட அனைத்து விடயங்களையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க அரசு தகவல் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் – என்றுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

லொஹான் ரத்வத்த தொடர்பான சம்பவங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com