சற்று முன்
Home / செய்திகள் / ஊரடங்கில் உணவு வழங்கிய உயர்ந்த உள்ளங்கள்

ஊரடங்கில் உணவு வழங்கிய உயர்ந்த உள்ளங்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்களது நிலை தொடரும் ஊரடங்கு காரணமாக நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.

அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களிற்கு இன்றைய ஊரடங்கு மத்தியில் வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களிற்கு உதவியாளர்களாக நிற்பவர்களது நிலை பரிதாபத்திற்குரியதாகியிருந்தது.

நகரிலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ஒரு வேளை உணவுக்காக அவர்கள் திண்டாடியமை தொடர்பில் ஊடகவியலாளர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பின் கவனத்திற்கு யாழ்.ஊடக அமையம் கொண்டு சென்றிருந்தது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட யாழ்.எயிட் அமைப்பினர் சமைத்த உணவு பொதிகளை இன்றைய இரவுவேளை ஊரடங்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் சகிதம் எடுத்து சென்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.

நாளைய தினம் மதியம் மற்றும் இரவு உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com