சற்று முன்
Home / செய்திகள் / ஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு

ஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு

மின்சார ரயில் விவகாரத்துடன் தன்னை தொடர்புபடுத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக 05 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நேற்று தெரிவித்தார்.

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முதலீட்டாளர்களைப் போன்று நாடகமாடிய சகோதரர்களை கைது செய்து சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தான் இலஞ்சம் கோரியிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுத்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, குற்றச்சாட்டை சுமத்தியவர்கள் மீது விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சி.ஐ.டி, நிதி மோசடி விசாரணைப் பிரிவு, பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள சர்வதேச வர்த்தக அமைச்சில் நேற்று (17) காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

“இலங்கையில் மின்சார ரயில் தொழிற்சாலையை நிறுவப் போவதாக கூறிக்கொண்டு வந்தவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது எமக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் ஊழல் நிறைந்தவர்கள். உள்நாட்டில் பல வங்கிகளில் இவர்களுக்கு எதிராக பல இலட்சம் ரூபாய் கடன்கள் உள்ளன. இவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவே ஒருவர் உள்நாட்டிலும் மற்றையவர் இத்தாலியிலும் உள்ளனர்.

இலங்கையில் இவர்கள் ஆரம்பித்த நிறுவனமொன்றை மக்கள் வங்கி இழுத்து மூடியுள்ளது. இவ்வாறு வங்குரோத்து நிலையிலிருக்கும் சகோதரர்களே 05 பில்லியன் யூரோ பெறுமதியான முதலீட்டை செய்ய முன்வருவதாக எம்மிடம் கற்பனை கதை கூற வந்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்புச் சபை மறுத்ததும் என் மீது அவதூறை ஏற்படுத்தியுள்ளனர்,” என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மூன்று வாரங்களாக என் மீது ஊடகங்கள் சேறு பூசியபோதும் ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்காதது அரசியல் வாழ்க்கையில் பெரும் விரக்தியை தனக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இத்தாலியில் நான் இதனுடன் சம்பந்தப்பட்ட நபரை தனியறையில் சந்தித்து தரகுக்கூலி கோரியதாகவே சந்தேக நபர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது முற்றிலும் பொய்யான விடயம். நான் இத்தாலியில் விரிவுரை நடத்தியபோது இந்நபர் வ​ைளிநாட்டவர்களுக்கு மத்தியில் குறுக்கிட்டு முதலீட்டு ஊக்குவிப்புச் சபையை தரக்குறைவாக பேசினார். இந்நிலையிலேயே நாம் விரிவுரை மண்டபத்துக்கு வெளியே வந்து அவருடன் பேசினேன். அதைநபர் தன்னிடம் 1,500 ஏக்கர் காணி இருப்பதாக கூறியதிலிருந்தே அவரொரு பொய்க்காரர் என்பதனை புரிந்து கொண்டேன்.

அத்துடன் விடயத்தை சமாளித்துக் கொண்டு வெளியேறினேன். அதன் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை. அவர் என்னுடனான சந்திப்பை குறுக்கும் நெடுக்குமாக ஒளிப்பதிவு செய்துக் கொண்டு அதனை வைத்து என்னை மிரட்டுகின்றார்.

தவறு செய்யாத நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்,” என்றும் கூறினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com