ஊடக சுதந்திரத்திற்கு உயிர்கொடுத்தோருக்கான பொது நினைவேந்தல்

Journalist Memorial # Invitation # Vakeesamஉன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ம் ஆண்டு நினைவு நாளும் எதிர்வரும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியினில் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து பிற்பகல் 03.30 பொதுநூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல் உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பவை வெளிடப்படவுள்ளது.

நினைவுரைகளை கலாநிதி ரகுராம்,நிலாந்தன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி, பாசன,சந்தேசிய பண்டார,ஜோதிலிங்கம் ஆகியோர் ஆற்றவுள்ளர்.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் நடைபெறும் இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தெற்கு அமைப்புக்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds