ஊடகவியலாளர் மீது தென்மராட்சியில் தாக்குதல்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்.எப்எம் வானொலியில் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.எவ்எம் பிரதம செய்தியாளரான எஸ்.மனோகரன் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார்.

இச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்கியவர்கள் முச்சக்கரவண்டியில் மிகுந்த மதுபோதையில் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத் தருணத்தில். பள்ளி வாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இரண்டு முஸ்லிம் அன்பர்கள் ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்ட போது அவர்களும் . ஆட்டோவில் வந்த மர்ம நபர்களால் பியர் மதுபோத்தலால் தாக்கப்பட்டார்கள்.

ஆட்டோவில் வந்த நபர்கள் ஜக்கிய தேசியக்கட்சி தென்மராட்சி அமைப்பாளர் சர்வானந்தா பெயரை அத்தருணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆட்டோவில் தப்பிவிட்டார்கள் . எனினும் இதனை சர்வானந்தா மறுதலித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com