ஊடகவியலாளர் குருநாதன் காலமானார்!

திருகோணமலை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று (1) வெள்ளிக்கிழமை காலை அமரத்துவம் அடைந்துள்ளார்.அவரது இறுதி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03 ம் திகதி காலை 10.00 மணிக்கு திருகோணமலை,148 பிரதான வீதியிலுள்ள அவரது சகோதரி வீட்டினில் நடைபெறுமென மகன் பிரதீபன் அறிவித்துள்ளார்.

முன்னதாக உதயன் மற்றும் வாராந்த வெளீயிடான சஞ்சீவியினில் யுத்த காலத்தினில் பணியாற்றியிருந்தார்.அத்துடன் தமிழ்நெட் இணையத்தின் கிழக்கு செய்தியாளராக நெருக்கடியான காலப்பகுதியினில் அவர் செயற்பட்டிருந்தார். அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளராகவும் இளம் ஊடகவியலாளர்களிற்கான முன்னோடியாகவும் செயற்பட்டிருந்தார்.

திருமலையினில் இடம்பெற்ற இனஅழிப்பு கொலைகள்,நில பறிப்பு,பௌத்த மயமாக்கல் என பலவற்றினை அவர் அம்பலப்படுத்தியுமிருந்தார்.

மாமனிதர் தராகி சிவராமின் மதிப்பிற்குரிய ஊடகவியலாளராக இருந்த குருநாதன் வாழ்நாள் முழுவதும் மரணம் வரை ஊடகவியலாளனாகவே வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com