யாழ் மாவட்டச் செயலகத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களைப் படம்பிடித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலின் இறுதித் தினமான நேற்று (21) யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் வெளியில் வந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவை ஊடகவியலாளர்கள் நேர்காணல் செய்வதற்காக வழிமறித்த போது அவருடன் கூட வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் “ எப்பவும் நீங்கள் தான் எங்களை படம் எடுக்கின்றீர்கள், இன்றைக்கு நான் உங்களை படம் எடுக்க போகிறேன் “ என கூறி தனது கையடக்க தொலைபேசியில் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சுமந்திரன் ஊடகவியலாளர்களைப் படம் எடுப்பதை ஊடகவியலாளர்கள் படம் எடுத்தபோது “நான் படம் எடுக்கிறதையே திரும்ப படம் எடுக்கிறாங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.