ஊடகவியலாளரை தாக்கிய சந்தேக நபர்களிற்கு 14ம் திகதிவரை விளக்கமறியலில்!

ஊடகவியலாளர் ப்ரடீ கமகே மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீர்கொழும்பு பதில் நீதவான் கருணாஜீவ கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த இரண்டு பேரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் காவற்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த இரண்டு பேரும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

ஊடகவியலாளர் ப்ரடீ கமகேவை தாக்குவதற்காக பயணித்த உந்துருளியும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds