ஊடகப் பணியாளர் இதயராஜாவுக்கு இதய அஞ்சலிகள்

கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகப்பணியாளர் ஜோகேஸ்வரராஜா இதயராஜா (ராஜன்) நேற்று (19.02.2018) அகாலமரணமடைந்துவிட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2001 உயர்தர கணிதப்பிரிவு மாணவனான ராஜன் யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடகக் கல்வி பயின்றவர்.

அவர் வலம்புரி, கொழும்பு தினக்குரல், உதயன், யாழ் தினக்குரல் ஆகிய ஊடகங்களில் பக்கவடிவமைப்பாளராக பணியாற்றியிருந்தார். தற்போதும் யாழ் தினக்குரலில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

– வாகீசம் ஊடகக் குடும்பத்தினர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com