ஊடகத்துறை மேலும் பலப்படுத்தப்படும்! – ஊடக அமைச்சர்

97769c6dbed9cb63e50b51d5c52f7598_Lஊடகவியலாளர்களின் தொழிலுரிமையைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு சிறந்த சம்பளத் தொகையொன்றினை நிர்ணயிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் நலன்புரி விடயங்களிலும் கவனம் செலுத்தப்படும்.

பல வருடங்களாக மேற்கொண்ட முயற்சி தற்போது நிறைவேறியுள்ளது. தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளில் இதுவுமொன்றாகும். இதனை நடைமுறைப்படுத்துவதே எமது அடுத்த எதிர்பார்ப்பு. தகவல் ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அதிகாரிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. உரிய அரச அதிகாரிகளை அரச நிறுவனங்களில் நியமிக்க வேண்டியுள்ளது. அதற்காக 4,000 அரச நிறுவனங்களுக்கு சுமார் 8,000 அதிகாரிகளை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஊடகவியலாளர்கள் தொழில் ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும். சுயாதீன ஊடகத்துக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான கொள்கைகள் முறைமைகள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். அனைத்தினையும் கவனத்தில் கொண்டு ஊடகத்துறையினை மேலும் பலப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com