ஊடகத்துறைக்கான சுயாதீன ஆணைக்குழு!

54e74905e89724e82e3694744c500a7a_Lசுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை விரைவில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இதனை நாங்கள் தனித்து செய்ய முடியாது. இதற்காக சட்டமூலம் ஒன்றினை கொண்டுவருவோம். அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆசிரியர்கள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியே இதனை முன்னெடுப்போம். இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதய காலத்தில் நாட்டில் ஊடகங்கள் எவ்விதமான ஒழுங்கு விதிகளும் இன்றி செயற்படுகின்றன. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும், பத்திரிகை பேரவையும் பலவீனமான நிறுவனங்களாகவே காணப்படுகின்றன. எனவே இது தொடர்பில் முடிவுக்கு வர வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com