உழவு இயந்திரத்தினால் கரை வலை இழுத்த மீனவர்கள் -திடிர்சோதனையில் அகப்பட்டனர்

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் திடிர் சோதனை நடவடிக்கையின் போது, உழவு இயந்திரத்தினை பாவித்து கரை வலை இழுத்த ஆறு உள்ளுர் மீனவர்களை கைது செய்துள்ளதாக திணைக்களத்தின் மாவட்ட பிரதிபணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன் தெரிவித்தார். இதன் போது இரண்டு உழவு இயந்திரங்கள் கைபெற்றப்பட்டு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாயாறு செம்மலை பகுதியில் விசேட ரோந்துப்பணியில் நீரியல்வளத்துறை மீன்பிடி பரிசோதகர்கள் ஈடுபட்டிருன்தனர். இதன் போது குறிப்பிட்ட சில மீனவர்கள் வழமையான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது ஒரு சில மீனவர்கள் இரு உழவு இயந்திரத்தினை பாவித்து கரை வலையினை இழுத்துக்கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. குறித்த நபர்களை கைது செய்த அதிகாரிகள் இரு உழவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். கைதான உள்ளுர் மீனவர்களுக்கு எதிராக நாளையதினம்(12) முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com