உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயம் இறுதிக்கட்டத்தில்

Election Commisஉள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய செயற்பாடுகள் இம்மாதம் 15ஆம் திகதி நிறைவடையும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் 40%, யாழ்ப்பாணம், கொழும்பு  ஆகிய மாவட்டங்களில் மறு உறுதிப்படுத்தல் பணிகள் எஞ்சியிருப்பதாகவும், இது தொடர்பான பெரும்பாலான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx எனும் முகவரிக்குச் சென்று உங்கள் வாக்காளர் பதிவு முறையாக இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்துமாறும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com