உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் – ரணில் தலமையில் அனைத்துக் கட்சிகள் ஆராய்வு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்றில் அங்கத்துவம் பெற்றிருக்காத கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் தற்போதுள்ள வட்டாரங்களின் அடிப்படையில் 60 சதவீதம் தொகுதிவாரியாகவும், 40 சதவீதம் விகிதாசார அடிப்படையிலும் தெரிந்தெடுப்பதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைக்கம் தெரிவித்ததாக தெரியவருகின்றது. இதன்போது பெண்களின் இட ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது. கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது ஒவ்வொரு கட்சியும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவிகித இடம் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com