உள்ளகப் பொறிமுறைகள் தேசிய ரீதியிலேயே முன்னெடுக்கப்படும்

போர்க்குற்ற விசாரணைகளுக்கான உள்ளகப் பொறிமுறைகள் தேசிய ரீதியிலேயே முன்னெடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வருடம் ஜனவரி 08 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்துக்கு பின்னர் அனைத்து வௌியுலக நாடுகளும் எம்மை நட்புறவுடன் பார்ப்பதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இந்தியா அமெரிக்கா ஏன் மனித உரிமைகள் ஆணையகம் கூட எமது நாட்டினை நட்புறவுடன் பார்க்கின்றனர், கலந்துரையாடுகின்றனர்.

எனவே அனைவரது சம்மதத்துடனே எமது அரசு போர்க்குற்ற விசாரணைகளுக்கான உள்ளகப் பொறிமுறைகள் தேசிய ரீதியிலேயே முன்னெடுக்கப்படும் எனவும் விசாரணைகளுக்கான தேவையான உதவிகள் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தௌிவாக அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இதனை புரிந்து கொள்ளாத சிலர் இந்த அரசாங்கம் சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இராணுவம் தவறிழைத்துள்ளதாக சர்வதேச விசாரணைகளில் உறுதிபடுத்துவதற்கும் அரசு முயற்சிப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது முற்றிலும் பிழையானதொரு விடயமாகும்.

தற்போதய அரசாங்கம் என்ற ரீதியில் அரசு படைவீரர்களுக்கு சார்பாகவும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மக்களுக்கும்  சார்பாகவும் தொழிற்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com