சற்று முன்
Home / செய்திகள் / உலகம் முழுவதும் கொரோனா பலி 32 ஆயிரத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பலி 32 ஆயிரத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை கோரோனா வைரஸ் தொற்றால் 6 லட்சத்து 86 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 400 பேர் குணமடைந்துள்ளனர். 32 ஆயிரத்து 239பேர் உயிரிழந்துள்ளனர்.

கோரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 850ஆக உள்ளது. அதிகம் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவில் கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இது புதிய உச்சமாகும். அந்த நாட்டில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதும் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 470 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com