உரும்பிராய்ச் சந்தியில் வாள்வெட்டு இருவர் படுகாயம் – சிகை அலங்கரிப்பு நிலையமும் சேதம்

யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்தியில் இன்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது உரும்பிராய் சந்தியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் மற்றும் பணியாளரே வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

சிகை அலங்காிப்பு நிலையத்துக்கு வந்த இருவர் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதன்பின்னர் வெளியில் சென்று மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்துவைத்திருந்த வாளினை எடுத்துக்கொண்டுவந்து இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதோடு கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை உரும்பிராய்ப் பகுதியெங்கும் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வீதி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com