சற்று முன்
Home / செய்திகள் / உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில்15.02.2018 அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான  குறித்த பெண்மணி தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், முதியோர் கொடுப்பனவு பெற வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பாரத்த போது அவர் கட்டிலிலேயே உயிரிழந்து கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா தொடர்பாக நோட்டன் பொலிஸாரும், அட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com