உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி தோட்ட பிரதேசத்தில் இருந்து மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆற்றிலிருந்து 06.05.2017 அன்று காலை 11 மணியளவில் உடல் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இத்தோட்டத்தில் உள்ள சிலர் தமது தொழிலுக்காக அப்பகுதிக்குச்செல்லும் வேளையில் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com