உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்துவோம் – யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்துவோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் – யாழ்.பல்கலைக்கழக முன்றல்
காலம்- மே -18, காலை 10 மணி
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ்.பல்கலைக்கழகம்.

விதிகளை மீறி ஒரு தனி இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய மனிதப் படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவுகள் இன்றும் காயாத குருதியாகி ஆறாத ரணங்களாக எங்கள் நெஞ்சங்களில் புரையோடிக்கிடக்க இந்த நாள் மீண்டும் ஒருமுறை நினைவில் எழுகிறது.

அந்நாளில் உயிர்துறந்த அப்பாவி உயிர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியானது இன்றும் மறைக்கபட்ட நீதியாகியுள்ளது. .நல்லாட்சி என்ற பெயரிலான அரசு இன்று குற்றமிழைத்தோரை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாமல் சுதந்திரமாக நடமாட விட்டிருக்க..!!

எம் இனிய உறவுகளே!

தமிழ் பேசும் ஒரே குற்றத்திற்காக வயது பேதமின்றி, கருவுற்ற குழந்தை முதல் கட்டிலில் கிடந்த முதியோர் வரை ஈவிரக்கமில்லாபேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட இந்த கறுப்பு நாளில் அத்தனை உறவுகளினதும் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களினது நீதிக்கான வேண்டுதலாகவும், உண்மையான உணர்வுகளோடு அஞ்சலி செலுத்துவோம் என்றுள்ளது.

குறிப்பு- இவ் அஞ்சலி நிகழ்வில் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

13177737_651116525042534_2048547415433050295_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com