உதயன் பத்திரிகை மீது படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டது – முன்னாள் மூத்த உறுப்பினர் சதா

20160829_130305
உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவத்தில் ஈ.பி.டி.பி கட்சியே படையினருடன் இணைந்து நேரடிாக ஈடுபட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள ஈ.பி.டி.பி கட்சியின் மூத்த உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தபொது தான் முகாம் பொறுப்பதிகாரிாக இருந்ததாகவும் படையினர் மற்றும் பொலிசார் தமது உறுப்பினர்களிற்கு உணவு உள்ளிட்ட அனைத்து விடையங்களிற்கும் தானே பொறுப்பதிகாரியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உதயன் பத்திரிகைமீதான தாக்குதல் சம்பவத்தின்போது டியூட்டி மாறியது தெரியாது சென்ற தமது உறுப்பிர்கள் இருவர்மீது விடுதலைப் புலிகள் என நினைத்து தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அந்த தாக்குதலின் போது காயமடைந்த ராஜன் மற்றும் திவாகரன் ஆகியோரை பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் அவர்கள் தற்போதும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்த அவர் உதயன் பத்திரிகை மீது தாக்குதல் மேற்கொண்டவர்களும், தாக்குதலை தூண்டியவர்களும் யாழ்ப்பாணத்தில் தான் தற்போதும் இருக்கின்றார்கள் என்றார்.

யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் தற்போதும் இருக்கின்றார்கள். சிலர் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்தால், மேலும் உண்மைகளை அறிய முடியும். இவ்வாறாக கொலை, கடத்தல், கொள்ளைகளில் ஈடுபட்டவர்களில் சிலர் இந்தியாவிற்கும் வெளிநாடுகளிற்கும் தப்பி ஓடிவிட்டதாகவும் பலர் தற்போதும் இங்கு நடமாடித் திரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.20160829_130131

இவற்றினை ஊடகங்கள் வாயிலாக தான் வெளிப்படுத்துவதால் தான் கொல்லப்படக்கூடும் எனத் தெரிவித்த அவர் அதற்காக தான் இனியும் பயப்படப்போவதில்லை எனவும் முன்னர் தான் உள்ளிட்டவர்கள் அமைப்பிலிருந்து தப்பிக்க முயற்சித்தபோது அவை முடியாமல் போனதாகவும் அவ்வாறானவர்கள் கொல்லப்பட்டதாகவும் படையினரிடம் சென்று சரணடைந்தவர்களை படையினர் ஈபிடிபியினரிடமே ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com