உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்று (3)காலை நடைபெற்றது.
இதன் போது ஈபிஆர்எல்எப் தலைவர் சரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி பெற்றுக் கொண்டார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி ஆகிய கட்சிகள் வேட்பாளர் அறிமுகம் செய்திருக்கும் நிலையிலையே தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமது கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நடைபெறவுள்ள உள்ளுராட்சி கூட்டமைப்பில் போட்டியிட முடியாதென வெளியேறியிருந்தது.
அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும், ஈரோஸ், புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பென்ற புதிய கட்சியை ஆரம்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களது அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் இன்றையதினம் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆணந்தசங்கரி மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com