உணவு ஒவ்வாமையினால் 13 பேர் வைத்தியசாலையில்….

விசேட விருந்துபசார வைபவம் ஒன்றில் உணவு ஒவ்வாததன் காரணமாக பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா மோரா தோட்டத்தில் 10 வயது சிறுமி உட்பட 13 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட மோரா பிரிவில் 13.08.2016 அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசார வீடு ஒன்றில் கலந்து கொண்ட அத்தோட்டத்தின் மக்களில் 10 வயது சிறுமி அடங்களாக 7 ஆண்களும், 6 பெண்களும் உணவு உட்கொண்டுள்ளனர்.

இதன்போது வழங்கப்பட்ட உணவு ஒவ்வாததன் காரணமாக வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டதன் காரணமாக 14.08.2016 அன்று காலை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அணைவரும் வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.DSC00644 DSC00653

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com