சற்று முன்
Home / செய்திகள் / உடலை தகனம் செய்த விவகாரத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல்

உடலை தகனம் செய்த விவகாரத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் ஆலய நிர்வாகம் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இது குறித்த நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குவை அடக்கம் செய்யவோ, சமாதி அமைக்கவோ தடைவிதித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று பகல் தடை விதித்திருந்தது.

ஆலயத்திற்கு அப்பாலுள்ள இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையோரமாக உடலை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், நீதிமன்ற உத்தரவு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே, ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்ய முயற்சிக்கப்பட்டது. இது குறித்து பொலிசாரும் நடவடிக்கையெடுக்கவில்லை.

இந்த நிலையில், சற்று முன்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி உடல் தகனம் செய்யப்பட்டது குறித்து தற்போது நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com