உங்கள் மொழி விளங்கவில்லை – ஆளுநரின் கடித்தை திருப்பி அனுப்பினர் யாழ். பல்கலை மாணவர்

14716177_1114358025279287_8167399478048199453_nகொலையான மாணவர்களிற்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆளுநர் ஊடக ஆங்கில மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு வடக்கு ஆளுனர் சிங்கள மொழியில் அனுப்பிய பதில் கடிதத்தை மாணவர்கள் ஏற்க மறுத்து மீண்டும் அக் கடிதத்தை ஆளுநருக்கே அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த திங்கள் அன்று யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகங்களை முற்றுகையிட்டு முடக்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனருக்கு ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜருக்கே ஆளுனர் குரே தனி சிங்களமொழியில் பதில் அனுப்பியுள்ளார்.

எனினும் ஆளுநர் அனுப்பிய பதில் கடிதத்தில் எழுதப்பட்டவை தங்களிற்குப் புரியவில்லையென தெரிவித்து அதனை ஆளுநர் ரெஜினோட் குரேக்கே பதிவு தபால் மூலமாக மாணவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஆளுநருக்கு திருப்பி அனுப்பிய கடித்தில்  இலங்கையின் தேசிய மொழிகளில் தமிழும் உண்டாவென கேள்வி எழுப்பி எழுதி அனுப்பியுள்ளனர்.

14610868_1114357978612625_3998267126431938518_n 14670597_1114357948612628_6397764876497157653_n
14725655_1114358045279285_6497646195850874229_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com