உங்கள் முன் கூனிக் குறுகி நிற்கின்றேன் – யாழில் இயக்குநர் புகழேந்தி

ஈழத்துத் தமிழர்கள் படுகின்ற இத்தனை இன்னல்களிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய எங்களுடைய கோளைத்தனம்தான் காரணம் என்கின்ற குற்ற உணர்வுடனேயே உங்கள்முன் உக்கார்ந்திருக்கின்றேன். நடைபெற்ற இனப்படுகொலையை தடுத்துநிறுத்த தமிழகத்தால் மட்டும்தான் முடிந்திருக்கும். வேறு யாராலும் தடுத்திருக்க முடியாது. தமிழகம் நினைத்திருந்தால் தமிழகம் நினைத்திருந்தால் இத்தனை கோடி தமிழர்கள் நினைத்திருந்தால் இந்த இனப்படுகொலையை த் தடுத்திருக்க முடியும் என்ற குற்ற உணர்ச்சியோடு இங்கு வரும்போது கூனிக் குறுகித்தான் இங்கு வந்தேன் என காற்றுக்கென்னவேலி, உச்சிதனை முகர்ந்தால் திரைப்படங்களை இயக்கியவரான தமிழின உணர்வாளர் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.

ஈழம் மற்றும் இடிந்தகரைப் போராட்டங்களை மையமாகவைத்து அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் கடல் குதிரைகள் திரைப்பட இசை வெளியீட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்காக வந்திருந்த அவரை ஊடக நேர்காணல் ஒன்றிற்காக யாழ் ஊடக அமையத்தில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அவருடனான உரையாடலிலிருந்து ,

என்னுடைய முதுகெலும்பை நிமிர்த்தியதுபோல நேற்று கேப்பாபிலவு மக்களுடைய போராட்டத்தை நேரில் சென்று பார்த்தேன். உலகில் அநீதி இழைக்கப்பட்ட எந்த மக்களும் ஒருநாள் தமது மௌனத்தைக் கலைத்துத்தான் ஆகவேண்டும். இந்த மக்களும் தங்கள் மௌத்தைக் கலைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதன் தொடக்கப்புள்ளியாகத்தான் கேப்பாபிலவு போராட்டத்தைப் பார்க்கின்றேன்.

ஈழத்தில் மெனிக்பாம் முள்வேலி முகமிலிருந்து தமிழகத்தின் இடிந்தகரைக்கு தப்பிச்செல்லும் கிருசாந்தி குமாரசாமி எனும் ஈழத்து பெண் தமிழக விளையாட்டு அணிக்காக டெல்லியில் நடக்கும் போராட்டி ஒன்றில் விளையாடி தேசிய சாதனை பெறுவதாக கதை நகர்ந்து செல்கிறது. இவ்வாறுதான் திரைக்கதை அமைத்திருக்கின்றோம்.

இத்திரைப்படம் ஏப்ரலில் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். பெரும்பாலும் மே மாத்தில் வெளியிடப்படும்.
26.02.2017 ஞாயிற்றுக்கிழமை ஈழத்தில் யாழ்ப்பாணம்-தெல்லிப்பளையில் இசை வெளியீட்டு விழ நடைபெறுகின்றது. ஒரு 15 நாட்களின் பின் தமிழகத்தில் இடிந்தகரையில் இசை அறிமுகவிழா நடைபெறவுள்ளது. அதன் பின்னர் படம் வெளியீட்டு திகதி தீர்மானிக்கப்படும்.

திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான போராளியாக தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார். இசை வெளியீட்டின்போது ஈழத்து பாடகி ஜெசிக்கா கனடாவிலிருந்து ஸ்கைப் மூலமாக இத்திரைப்படத்திற்கு உயிர்ப்பைக் கொடுக்கின்ற பாடலைப் பாடவிருக்கின்றார். ஈழத்தின் மூத்த பாடலாசிரியர் ஜயா காசியானந்தனின் வரிகளிற்கு ஈழத்தின் இளைய பாடகியான ஜெசிக்கா குரல் கொடுத்திருக்கிறார்.

உலகில் நடைபெற்ற உன்னதமான போராட்டங்களாக ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தையும் தமிழகத்தில் நடைபெற்ற இடிந்தகரைப் போராட்டத்தையும் நான் நோக்குவதாகத் தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஈழப் போராட்டமும் சர் இடிந்தகரைப் போாட்டமும் சரி நசுக்கப்பட்டுவிட்டதாகவும் அடக்கப்பட்டுவிட்டதாகவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் ஒரு தவறான செய்தி பரவிவருகின்றது இந்தத் திரைப்படத்தின் நோக்கமே எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் முடிவிற்கு வந்துவிடாது என்பதைச் சொல்வதுதான் இந்தப் படம். இந்தப் படத்தின் கதை இடிந்தகரை மற்றும் ஈழம் ஆகிய இரண்டு மையப்புள்ளிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்திய திரைப்பட தணிக்கைக்குழு இத்திரைப்படத்திற்கு தடைவிதித்தது. எனினும் மீள் பரிசீலனைக் குழுவிற்கு அனுப்பினோம் எங்களது நல்லகாலம் குழுவில் எஸ்.வி.சேகர் இருந்தார் அவரது உதவியோடு ஒருசில தணிக்கைகளிற்கு உட்பட்டு யு தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்கின்றோம். இலங்கையின் நண்பனான இந்தியா இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கியிருக்கிது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com