சற்று முன்
Home / செய்திகள் / “உங்களின் விடுதலைப் போராட்டத்தை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்”

“உங்களின் விடுதலைப் போராட்டத்தை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்”

அரசியல் கைதிகளே நீங்கள் உங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுங்கள் உங்களின் விடுதலைக்கான போராட்டத்தை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளை நாளை சனிக்கிழமை நேரில் சந்தித்து பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தவுள்ளது.

தற்போது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றிரவு மதவாச்சியில் தங்கிய பின்னர் நாளை அனுராதபுரத்தை சென்றடையவுள்ளனர். அவர்களுடன் இணைந்து அரசியல் கைதிகளினை சந்தித்து அவர்களது விடுதலைப்போராட்டத்திற்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்போமென்ற உறுதி மொழியுடன் முடிவுறுத்த பொது அமைப்புக்கள் கோரவுள்ளன.

போராட்டத்தில் குதித்துள்ள அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு இம்முடிவிற்கு பொது அமைப்புக்கள் வந்திருந்தன.

இதனிடையே அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்போம். இல்லையேல் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்வைக்கவேண்டுமென்ற உத்தரவாதங்களை முன்னிறுத்தியும் போராட்டத்தை நாங்கள் பொறுப்பெடுக்கின்றோமென அரசியல் கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கியும் போராட்டத்தை முடிவுறுத்த கோருவதென வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறுபட்ட பொது அமைப்புக்கள்,அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பு என்பவை இணைந்து இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியிருந்தன.

சந்திப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானப்பிரகாரமே நாளை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளது.

இதனிடையே வடமாகாண முதலமைச்சர் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக கொழும்பு செல்கின்ற நிலையில் அவர் மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கின்ற அரசியல் கைதிகளை சந்திப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com