ஈபிடிபியின் நெடுந்தீவுக் கோட்டை தமிழ்க் கூட்டமைப்பு வசமானது !!

ஈபிடிபியின் கோட்டை என அழைக்கப்படும் நெடுந்தீவுப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

13 உறுப்பினர்களைக் கொண்ட நெடுந்தீவுப் பிரதேச சபையின் தவிசாளர் தேர்வு இன்று (06) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளர் தேர்விற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திலீப் பற்றிக் றொசானையும் ஈபிடிபி நல்லதம்பி சசிக்குமாரினையும் பிரேரித்தது.

பகிரங்கமாக நாடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியான திலீப் பற்றிக் றொசானுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் இரு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 07 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஈபிடிபி சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி சசிக்குமாருக்கு ஆதரவாக ஈபிடிபியின் 06 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியான திலீப் பற்றிக் றொசான் மேலதிக ஒரு வாக்கினால் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற உதவித் தவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ச .லோகேஸ்வரன் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com