இ.போ.ச சாரதி மீது யாழில் தாக்குதல்

DSC 41யாழ்ப்பாணம் தட்டாதருச் சந்தியில் பிரயாணி ஒருவர் பேருந்து சாரதி ஒருவர் மீத கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மருதனார்மடம் ஊடாக காங்கேசன்துறை செல்லும் 782/4 ஆம் இலக்க பேருந்து சனிக்கிழமை (13) பிற்பகல் யாழ் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தில் பிரயாணம் செய்த பிரயாணி ஒருவர் அதீத மதுபோதையில் ஏனைய பயணிகள் மீது தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும்  இதனால் குறித்த பிரயாணியை பேருந்தில் இருந்து இறக்கிவிட நடத்துநர் முயற்சித்தபோதும் அவர் முரண்டுபிடித்ததால் சாரதியும் நடத்துனரும் இணைந்து அவரை தட்டாதருச் சந்தியில் வைத்து கீழிறக்கிவிட்டு பேருந்தில் ஏற முற்பட்டபோது குறித்த பிரயாணி பாரிய கல் ஒன்றினை எடுத்து சாரதி மீது எறிந்தபோது சாரதியின் பின் தலைப்பகுதியில் பட்டு பலத்து காயத்திற்கு உள்ளானார்.

 

இந்நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த பிரயாணியை தாக்கியபின் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிசார் குறித்த பிரயாணியைக் கைது செய்து சென்றுள்ளனர்.

 

 

DSC 09 DSC 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com