இ.தொ.கா வின் மே தின விழா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின்  மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது.

இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, தொழிலாளர் தேசிய சங்க முன்னால் தலைவர் டி.ஐயாதுரை, முன்னால் நுவரெலியா பிரதேச சபை தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினருமான என்.சதாசிவன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் இளங்கோவன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர்

இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.DJI_000 (1) DJI_000 (2) DJI_000 (3) DJI_000 (4) DJI_000 (5) DJI_000 (6) DJI_000 (7) DJI_000 (8) DJI_000 (9) DJI_000 (10)

DCIM100MEDIADJI_0010.JPG

DCIM100MEDIADJI_0010.JPG

DCIM100MEDIADJI_0012.JPG

DCIM100MEDIADJI_0012.JPG

IMG_2511 IMG_2512 IMG_2523 IMG_2581 IMG_2585 IMG_2601 IMG_2604 IMG_2643 IMG_2651 IMG_2999 IMG_3010 IMG_3047 IMG_3053 IMG_3062 IMG_3066 IMG_3069 IMG_3094 IMG_3101 IMG_3112 IMG_3124 IMG_3158

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com