இவ்வளவு செய்த நான், 10 நாட்களில் துரோகி ஆக்கப்பட்டுவிட்டேன் – முரளிரதரன் வருத்தம்

murali-1இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடருக்காக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இடம்பெறும் போட்டிக்கு முன்பாகவும், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால சர்ச்சையை, எழுப்பியுள்ளார்.

“இம்முடிவு, நீண்டகால அடிப்படையில் முரளிக்கே பாதகமாக அமையுமே தவிர, இலங்கை கிரிக்கெட்டுக்கு அல்ல” என தெரிவித்துள்ள அவர், இதற்கு முன்னர், பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களில் முரளியைப் பாதுகாத்ததாக சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலியாவோடு இணையும் முரளியின் முடிவு, தன்னைக் காயப்படுத்தியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறான முடிவால், அவரது தொழில் ரீதியான கிரிக்கெட் வாழ்க்கை முன்னேற்றம் அடைவதில் எவ்வித தடையும் கிடையாது எனத் தெரிவித்த திலங்க சுமதிபால, உள்ளூர் விளையாட்டரங்கொன்றை, உரிய அனுமதியின்றி அவுஸ்திரேலிய வீரர்களைப் பயிற்றுவிக்க முரளி பயன்படுத்தியமை குறித்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, முரளி விவகாரத்தை, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ், ஆரம்பத்திலிருந்து இது ஒரு சாதாரண விடயமாக தெரிவித்து வந்தநிலையில், நேற்று (25) இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “இது ஒரு பெரிய விடயம் அல்ல. எவருக்கும் தான் விரும்பிய தொழிலொன்றைச் செய்வதற்கு அனுமதி உண்டு” என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையின் நட்சத்திர வீரரான சங்கக்காரவும் முரளிக்கு ஆதரவாகவே தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், இலங்கையின் சில ஊடகங்களும் சமூக ஊடக இணையத்தளங்களும், முரளியைத் துரோகி என அழைப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரவித்த முரளிதரன், இவ்வளவு செய்த நான், 10 நாட்களில் துரோகி ஆகியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

ஆயினும், ஒவ்வொரு அணிக்கும் நியமிக்கப்படும் பயிற்சியாளர்கள் மற்றுமொரு நாட்டைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்பதோடு, தற்போதைய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் கோச் என்பதோடு, அவர் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவ் வட்மோர் பயிற்றுவிப்புப் பணியில் இருந்த சமயத்திலேயே இலங்கை அணி உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.sanga_support_to_murali-1-673x248

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com