இவர்களிற்கு என்ன பதில் சொல்வது எனும் பாணியில் கல்வி அமைச்சர் நடந்துகொள்கிறார் – அனந்தி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் தாம் எது கேட்டாலும் தான் இவர்களிற்கு என்ன பதில் சொல்வது என்ன தொரு பாணியில் தம்மை பார்த்துவிட்டு பதில் ஏதும் வழங்காது நடந்துகொள்வதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்று (21) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறினால் அவற்றை உரிய முறையில் கல்வி அமைச்சர் செவிமடுப்பதாக எனக்கு தெரிவில்லை. நாம் ஏதேனும் கேட்டாலும் , இவர்களுக்கு என்ன பதில் சொல்வது போன்றதொரு பாணியில் எங்களை பார்த்து விட்டு அவற்றுக்கு பதில் சொல்வதில்லை என கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டினார்.
அனந்தி சசிதரன் இவ்வாறு குற்றம் சாட்டும் வேளையில் கல்வி அமைச்சர் சபையில் இல்லை என்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com