சற்று முன்
Home / செய்திகள் / இளைஞர்கள், பட்டதாரிகள் நடுத்தெருவில் – வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் மனைவிக்கும் மாமனுக்கும் மச்சாளுக்கும் நிரந்தர நியமனம் !!!

இளைஞர்கள், பட்டதாரிகள் நடுத்தெருவில் – வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் மனைவிக்கும் மாமனுக்கும் மச்சாளுக்கும் நிரந்தர நியமனம் !!!

வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் வேலைவாய்ப்பற்றிருக்கும் நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சபையின் இறுதி அமர்வில் பிரேரணை முன்வைத்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுக்கான கோட்டாவின் அடிப்படையில் அவர்களின் பணிக்கென முகாமைத்துவ உதவியாளர் அலுவலக உதவியாளர்கள் என மூவரை பணிக்கு அமர்த்தும் சட்ட ஏற்பாடு உள்ளது. அதனைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காது மனைவி, மச்சாள், மாமன், சித்தப்பா பையன் என தமது குடும்ப உறுப்பினர்களை குறித்த பதவிகளில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் நியமித்திருந்தனர்.

இதனை வாகீசம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது தாங்களின் ஐந்து வருட உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர்களால் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் நியமனமும் இரத்துச் செய்யப்படவேண்டியுள்ளது.

இந்நிலையில் தம்மால் நியமனம் செய்யப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களின் நியமனங்களை நிரந்தர நியமனமாக்கும் பிரேரணையை அவசர அவசரமான வடக்கு மாகாணசபையின் கடந்த இறுதி அமர்வில் உறுப்பிர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

முன்னதாக வடமாகாண முதலமைச்சர்,அவைத்தலைவர்,பிரதி அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்களின் முகாமைத்துவ உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென முதலமைச்சரால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் பொங்கியெழுந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் தமது முகாமைத்துவ உதவியாளர்கள் , அலுவலக உதவியாளர்கள் என்ற போர்வையில் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்பதையும் இணைத்து தீர்மானம் இயற்றப்படவேண்டும் என வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இறுதியில் அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து உறுப்பினர்களதும் முகாமைத்துவ உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாகாண உறுப்பினர் சுகிர்தன் மனைவி,தந்தை மற்றும் சகோதரனிற்கு நியமனம் வழங்கியுள்ளார். அமைச்சர் அனந்தியோ மகளிற்கும் என பலரும் அவ்வாறே குடும்பத்தவர்களிற்கு நியமனம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அனைவரிற்கும் தற்போது வடமாகாணசபையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. எனினும் 60 வயது கடந்த முதியவவர்களிற்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமாவென்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com