இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மனித வளப் பற்றாக்குறை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிகளை திறம்பட செயற்படுத்த முடியாமைக்கு மனித வளப் பற்றாக்குறையே காரணம் என தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி விக்ரமசிங்க

சர்ச்சைக்குரிய எவன்காட் சம்பவம் தொடர்பில் தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இது குறித்த மேலதிகத் தகவல்களை வழங்க முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை தற்போது ஆணைக்குழுவுக்கு 10,000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஆணைக்குழுவின் வேலைகளுக்காக 800 அதிகாரிகள் தேவை எனவும் ஆனால் இருப்பதோ 150 அதிகாரிகள் மட்டுமே எனவும் கூறியுள்ளார். 

இதனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆணைக்குழுவின் வேலைகளை திறம்பட நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் தில்ருக்‌ஷி மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com