இலஞ்சம் கொடுக்கவில்லை ! – மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றது பொலிஸ் ?

உரிய அனுமதிப்பத்திரம் இல்லை என கூறி இலஞ்சம் கோரிய பொலிசாருக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறித்து சென்றுள்ளனர்.

யாழ். முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

தனது பிள்ளைக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் பிள்ளையை வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் போது முட்டாஸ் கடை சந்தியில் நின்றிருந்த போக்குவரத்து பொலிசார் அவர்களை மறித்து வாகன வரி அனுமதிப்பத்திரம் , காப்புறுதி பத்திரம் என்பவற்றை சேதனையிட்டனர். பின்னர் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை சோதனையிட கோரிய போது பொலிசாரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை (தடகொல) கொடுத்தார்.

அதனை பரிசீலித்த போலீசார் அந்த அனுமதிப்பத்திரத்தின் காலம் முடிந்து விட்டது என கூறியுள்ளனர். அதற்கு அவர் ஆம் , குறித்த திகதிக்கு முன்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை மீட்கததால் தற்போது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் தவணை எதிர்வரும் 24ஆம் திகதி என கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த போலீசார் குறித்த அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றது. அதனை பயன்படுத்தி வாகனம் செலுத்த முடியாது. தற்போது இலஞ்சமாக சிறு தொகை தந்தால் தாம் விடுவதாக கூறியுள்ளனர்.

அதற்கு குறித்த குடும்பஸ்தர் தன்னிடம் தற்போது உள்ள பணம் தனது பிள்ளையின் மருத்துவ செலவுக்கு போதுமாதாகவே உள்ளது என கூறியதுடன் , தான் எதற்கு இலஞ்சம் தர வேண்டும் என பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதும் , போலீசார் மோட்டார் சைக்கிளை பறித்து செல்ல முற்பட்டு உள்ளனர். அதற்கு குடும்பஸ்தர் இடமளிக்காமல் , தொடர்ந்து வாக்குவாத ப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து போலீசார் குறித்த இடத்திற்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து வாகனத்தில் மேலதிக போலீசாரை அழைத்தது , குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளை பொலிஸ் வாகனத்தில் பறித்து ஏற்றி சென்றனர்.

அதனால் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளையுடன் நடந்தே சென்றார்.

பொலிசாரின் இந்த அநாகரிக செயற்பாடு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com