சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை முழுவதும் அதிகாலை பரவிய வதந்தியால் மஞ்சள் நீராடிய ஆண்கள் !

இலங்கை முழுவதும் அதிகாலை பரவிய வதந்தியால் மஞ்சள் நீராடிய ஆண்கள் !

SAMSUNG CAMERA PICTURES

யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்திபெற்ற முருகன் ஆலயமான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆலய கோபுரக் கலசம் உடைந்து விழுந்துவிட்டது என்றும், இலங்கையின் பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கோபுர கலசம் உடைந்து விழுந்துவிட்டதாகவும் வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள சைவ மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

மாறி மாறி மேற்குறிப்பிட்ட ஆலயங்களில் ஏதே ஒரு ஆலயத்த்தின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.

ஆலயத்தின் கோபுரக் கலசம் உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான சைவர்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.

சில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து, ஊடகவிலயாளர்கள் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையிடம் விடயங்களை வினவி வதந்தி பரப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பின்பே நிலமை சீரடைந்தது.

இதனிடையே நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com