இலங்கை மீதான மீன் ஏற்றுமதித் தடை நீக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.
இன்று (21) நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டது என்று ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில் ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்து கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு நடவடிக்கைக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds