இலங்கை – பாகிஸ்தானுக்கிடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று (05.01.2016) எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் காலை 11. 15 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.முன்னதாக பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக வரவேற்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை உத்தியோகபூர்வமாக வரவேற்ற பின்னர் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகையானது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இலங்கையின் இன்பத்திலும் துன்பத்திலும் அருகில் இருந்த பாகிஸ்தான் யுத்த காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். நாம் அதில் கலந்துகொள்வோம். கடந்த காலங்களில் ஐநா, மனித உரிமை பேரவை என்பவற்றில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளின் போது பாகிஸ்தான் எம்மோடு கரங்கோர்த்தது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாகிஸ்தான் உறவுகளை வளர்த்துக்கொள்வது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com