இலங்கை படகு தனுஸ்கோடியில் கரை ஒதுங்கியுள்ளது

இலங்கையில் இருந்து சென்றதாக நம்ப்ப்படும் 20அடி நீளப் படகு ஒன்று இந்திய தனுஷ்கோடி தென்கடல் பகுதி கடலில் அநாதரவாக நின்றவேளையில் இந்திய கரையோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகம் தனிஸ்கோடி கடற்பரப்பில் ஆறு கடல் மையில் தொலைவில் தரித்து நின்ற இப் படகு இலங்கையை சேர்ந்த படகு என இனம் கண்ட தமிழக மீனவர்கள் அதனை அவதானித்தவேளையில் படகினில் யாருமே இன்றிக் கானப்பட்டதனால் உடனடியாகவே இவ்வாறு ஓர் படகு நிற்பதாக மீனவர்கள் 1093 என்ற இலவச எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அத் தகவலை அடுத்து தமிழக கடலோர காவல்படை குழும போலீஸ்சார் படகை மீட்டு தனுஷ்கோடி பகுதியில் உள்ள முத்திராயர் சத்திரம் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படகில் சென்ற  நபர்கள் குறித்து மத்திய மாநில உளவுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். படகில் இஞ்சின் மண்எண்ணெய் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு சென்ற 20 அடி படகினில் ஓ எவ் ஆர் பி – ஏ- 4044 என் வீ ஓ என்ற எழுத்து அடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com