இலங்கை நீதிச்சேவையில் நிலவும் வெற்றிடங்கள்

01. நீதிச்சேவைகள் ஆணைக்குழு
* இலங்கை நீதிச்சேவையில் நிலவும் வெற்றிடங்கள்
இலங்கை நீதிச்சேவையின் II ஆம் வகுப்பின் I ஆம் தரத்திற்குரிய நீதிவான் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. உரிய தகைமைகளைப் ப{ர்த்திசெய்துள்ள நபர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2017.08.08 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பிவைத்தல் வேண்டும்.
2. தகைமைகள் :
(அ) தொழில் நியாய சபையின் தலைவராக இரண்டு வருடங்களுக்குக்
குறையாத சேவைக்காலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் ;
அல்லது
(ஆ) ஐந்து வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதியில் வினைத்திறன்மிக்க
முறையில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
அல்லது ஈடுபட்ட வழக்கறிஞராக இருத்தல் வேண்டும் ; அல்லது
(இ) ஏதேனுமொரு அமைச்சில் அல்லது அரச திணைக்களம் ஒன்றில்
அல்லது அரச கூட்டுத் தாபனம் ஒன்றில் சட்ட அதிகாரியாக
ஐந்து வருடங்களுக்குக் குறையாத சேவைக்காலத்தைக் கொண்ட
வழக்கறிஞராக இருத்தல் வேண்டும் ; அல்லது
(ஈ) ஏதேனுமொரு கம்பனியில் அல்லது வங்கியில் அல்லது
நிறுவனத்தில் சட்ட அதிகாரியாக ஐந்து வருடங்களுக்குக் குறையாத
சேவைக்காலத்தைக் கொண்டவராகவும் அக்காலப்பகுதியில்
தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞராகவும்
இருத்தல் வேண்டும்.

மேலதிக விபரங்களை 07.07.2017 திகதி அரச வாத்தமானியில் பார்வையிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com