சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான கல்கிசை – தெகிவளை மாநகர சபை உறுப்பினர் றஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இரத்மலான பகுதியில் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டுள்ள  றஞ்சன் சில்வா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com